கோறளைப்பற்று மத்தியில் ஐவருக்கு கோவிட் தொற்று
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று 44 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனை முடிவுகளில் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பகுதியைச் சேர்ந்த 44 பேருக்கும் ஆன்டிஜன் பரிசோதனையும், 45 பேருக்கு பி. சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே ஐவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பரிசோதனைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.




பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan