கோவிட் தொற்று நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படும் போக்கு அதிகரிப்பு என தகவல்
கோவிட் தொற்று நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மருத்துவமனையின் இயக்குநர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரை நாள் ஒன்றுக்கு ஒரு சிறுவர் மாத்திரமே கோவிட் தொற்றுக்கு இலக்காகி அனுமதிக்கப்பட்ட சூழ்நிலை இருந்தது.
அது இப்போது ஐந்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கோவிட் நோய்த்தொற்றுடன் தாய்மார்களும் கண்டறியப்படுகின்றனர்.
அதன்படி, தினமும் எட்டு முதல் பத்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என ்குறிப்பிட்டுள்ளார்.