கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது! - சுகாதார அமைச்சு அறிவிப்பு
கோவிட் பெருந்தொற்று குறித்த கட்டுப்பாடுகள் தற்போதைக்கு களயப்படாது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்பொழுது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்களை உடன் நீக்கும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் அதற்கு இடமளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில மேற்குலக நாடுகளில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சடுதியான உயர்வினை பதிவு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை மிக ஆபத்தானது அல்ல என்ற போதிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் அளவிற்கு இயல்பு நிலைமையும் திரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தொற்று உறுதியாளர் பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
