கோவிட் நான்காவது தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தகவல்
கோவிட் நான்காவது தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள பைசர் கோவிட் தடுப்பூசி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் காலாவதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்பூசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளைச் செய்து வருகின்றனர்.
இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நான்காவது கோவிட் தடுப்பூசியை ஏற்றுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய தடுப்பூசிகளை வெளிநாடு ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் அவ்வாறு விற்பனை செய்ய முடியாது எனவும் ஏனெனில் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை என மேலும் குறிப்பிடுகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
