பொது சுகாதார பரிசோதகர் மற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஆகியோருக்கு கோவிட் தொற்று
வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும், நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் தடிமன் மற்றும் இருமல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளல், தொற்றாளர்களை தனிமைப்படுத்தல், தொற்றாளர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணித்தல், தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட கள வேலைகளில் ஈடுபட்ட வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் ஒருவரும், நோயாளர் காவு வண்டி சாரதியுமே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சுகாதார பரிசோதகருக்கு சில மாதங்களுக்கு முன்னரும் கோவிட் தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்திருந்தமையும், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam