கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கோவிட் தொற்றுக்குள்ளான சிறைக்கைதி தப்பியோட்டம்
நெஞ்சுவலி காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிட் தொற்றுக்குள்ளான சிறைக்கைதி ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.
இயக்கச்சி கோவிட் சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டம் ஒன்றைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தனக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்த குறித்த நபர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்த அவர் இயக்கச்சி கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும், பாதுகாப்புத்
தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.