கறுப்பு பூஞ்சை காரணமாக மரணம் பதிவானதாக வெளியான தகவலில் உண்மையில்லை!
கறுப்பு பூஞ்சை காரணமாக கோவிட் தொற்று உறுதியாளர் ஒருவர் உயிரிழந்தார் என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கராப்பிட்டிய போதான வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்த நபர் ஒருவர் கறுப்பு பூஞ்சை நோயினால் உயிரிழந்தார் என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த மரணம் கறுப்பு பூஞ்சை காரணமாக சம்பவிக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் செல்டன் பெரேரா (Dr. Shelton Perera) தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி உயிரிழந்தார் எனவும், மரணம் தொடர்பில் சந்தேகம் காரணமாக நுரையீரல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பிலான அறிக்கையில் கறுப்பு பூஞ்சைகள் நுரையீரலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சட்ட வைத்திய அதிகாரி நடாத்திய பிரேதப் பரிசோதனையின் போது குறித்த நபர் கோவிட் நிமோனியாவினால் உயிரிழந்தார் எனவும், கறுப்பு பூஞ்சையினால் அல்ல எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி.....
கோவிட் நிமோனியா கறுப்பு பூஞ்சை தொற்றால் இலங்கையில் இறந்துள்ள முதல் நபர்

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
