கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு! - உபுல் ரோஹன
நாளாந்தம் சுமார் இரண்டாயிரம் கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் தற்பொழுது கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை பெருமளவில் உயர்வடைந்துள்ளது. நாளாந்தம் சுமார் இரண்டாயிரம் வரையிலான தொற்று உறுதியாளர்கள் பதிவாகின்றனர்.
எனினும் ஊடகங்களில் சரியான புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்படுவதாக தென்படவில்லை. நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பினால் வைத்தியசாலைகளின் கொள்ளளவு நிரம்பியுள்ளது.
மேலும் சிகிச்சை நிலையங்கள் பலவற்றிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பானது எதிர்வரும் காலங்களில் சுகாதாரக் கட்டமைப்பினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்தால் மரணங்களும் அதிகரிக்கும் என உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam