யாழ்.பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இருவருக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் கிளிநொச்சியையும், மற்றையவர் பதுளையும் சேர்ந்தவர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற 29 பேரிடம் பரிசோதனை பெறப்பட்டது.அவர்களில் ஒருவர் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையையும் சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
