பதுளை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள கோவிட் கொத்தணி
பதுளை வைத்தியசாலையில் புற்று நோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அறையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கிடைக்க பீசீஆர் பரிசோதனை மூலும் அந்த அறையில் கோவிட் தொற்றுக்குள்ளான 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைத்தியர் ஒருவர், ஊழியர் ஒருவர், நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்ப்பதற்காக வந்த 29 பேர் கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி இந்த அறையில் பணியாற்றிய தாதி ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்றைய தினம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுக்குள்ளான வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.