சுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் கோவிட் சட்டங்கள்! தமிழ் சமூகம் கவனிக்க வேண்டியவை
உலகையே மரண பீதியில் வைத்திருக்கும் கோவிட் தொற்றிலிருந்து நாம் எம்மை பாதுகாப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பதும் என்ற அடிப்படையிலே யோசிக்கும் பொழுது இது நாம் ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை காப்பாற்றுவதற்கான ஒரு வகையான வழிமுறை என்றே பார்க்கக்கூடியதாக உள்ளது என சுவிட்சர்லாந்தின் சோஷலிச ஜனநாயக கட்சியினுடைய அரசியல் பிரமுகரும் சமூக ஆர்வலருமான சுதாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுவிட்சர்லாந்தில் கோவிட் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய சட்டத் திருத்தம் தொடர்பில் தெளிவுப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறாக புதிய கோவிட் சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்த உள்ளமை இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று மனித உரிமைகள் சம்பந்தமாகப் பேசப்படுபவர்கள், அதிகூடிய கவனம் செலுத்துபவர்கள் அது சம்பந்தமாக தங்களுடைய தனிப்பட்ட நடைமுறைகளுக்கு எதிரான ஒரு நிகழ்வாகப் பார்க்கின்றார்கள்.
ஆனால் இது ஒரு பண்டமி என்று சொல்லப்படுகிற நோய் பரப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்பொழுது நாம் எம்மை பாதுகாப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பதும் என்ற அடிப்படையிலே யோசிக்கும் பொழுது இது நாம் ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை காப்பாற்றுவதற்கான ஒரு வகையான வழிமுறை என்றே பார்க்கக்கூடியதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.