இலங்கையில் கடுமையாகவுள்ள கோவிட் சட்டங்கள்
இலங்கையில் பொது போக்குவரத்து சேவையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை பேருந்து உரிமையாளர்களும் பொது மக்களுக்கு மறந்து விட்டதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டத்திட்டங்களை மேலும் கடுமையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தில் ஆசனங்களில் மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பேருந்துகளில் மக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டங்கள் மறக்கப்பட்டுள்ளன. மக்கள் விருந்துகள் நடத்துகின்றார்கள். அதிக மக்களுடன் இணைந்து திருமண வைபங்களை நடத்துகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் நாடு ஆபத்தான நிலைமைக்கு மீண்டும் சென்றுவிடும். இதனால் நாட்டில் மீண்டும் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 25 நிமிடங்கள் முன்
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan