வடக்கில் இன்றும் 6 பேருக்கு கோவிட் - 19 தொற்று!
வடக்கு மாகாணத்தில் இன்றும் 6 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 377 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்குக் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" - என்றார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
