கோவிட் தொற்றால் ஆண்களுக்கு கருவுறுதல் குறையும்
கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆண்களின் கருவுறுதல் பெருமளவில் குறையும் என விசேட மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் இந்த விசேட மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த 120 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒரு மாதத்திற்குள் குறைவான காலத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கலந்துக்கொண்ட 60 வீதமான ஆண்களின் விந்தணுவின் சராசரி இயக்கம் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஒரு மாதம் முதல் இரண்டு மாத காலத்திற்குள் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கலந்துக்கொண்ட ஆண்களில் 37 வீதமானனோருக்கு விந்தணுவின் சராசரி இயக்கம் குறைந்துள்ளது.
இரண்டு மாதத்தின் பின்னர் இந்த வீதம் 28 எனவும் தெரியவந்துள்ளது. மேலும் கோவிட் தொற்றுக்கு பின்னர் ஆண்களில் விந்தணுவின் அடர்த்தி குறையும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒரு மாதத்திற்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களில் 37 வீதமானோருக்கு விந்தணுவில் உயிரணுக்கள் குறைந்துள்ளன.
நோய் தொற்றுக்கு உள்ளாகி ஒரு மாதம் முதல் இரண்டு மாத காலத்திற்குள் பரிசோதிக்கப்பட்ட ஆண்களில் 29 வீதமானனோரின் விந்தணுவின் அடர்த்தி குறைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியந்துள்ளனர்.