இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து 7 கோவிட் பரிசோதனையிலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
சுகாதார கொள்கை தொடர்பான நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பீட்டிற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கோவிட் பரிசோதனை அறிக்கைகள் 10 நாட்கள் வரை தாமதமாகும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அச்சுறுத்தலான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனையின் முடிவுகள் தாமதமாவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொழில் பயிற்சிக்கு வருகை தந்த 60 பேர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam