கோவிட் தொற்றினால் கிண்ணியாவில் இதுவரை 18 பேர் பலி
கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (22) மாத்திரம் மூவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாகக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்ட 3வது கோவிட் அலையின் மூலம் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இன்று (23.05.2021) காலை 11, 00 மணி வரையுமான காலப்பகுதிக்குள் 18 நபர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதில் 12 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். இந்த இறப்பு வீதமானது தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதேபோன்று தொற்றுக்குள்ளாகி வருவோரின் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த 21.05.2021 ஆம் திகதி 96 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதனிலை தொடர்பாளர்களாக இருந்தவர்கள் 11 பேரும், எழுமாறாக செய்யப்பட்ட பரிசோதனையில் இருவரும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.
மேலும் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் ஒருவருமாக மொத்தம் 14 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பெண்களும், 4 ஆண்களும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.
இதேபோன்று நேற்று (22.05.2021) 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 8 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில் ஒரு பெண்ணும் ,7 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, நேற்று (22) கிண்ணியா சுகாதாரப் பிரிவிலிருந்து 37 கோவிட் தொற்றாளர்கள் கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 24 பெண்களும் 13 ஆண்களும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்தோர் விபரம் (23.05.2021 காலை 11, 00 மணி வரை)
2021.02.23 (78), ஆண், அடப்பனார் வயல், கிண்ணியா - 5
2021.05.11 (75), பெண், பிரதான வீதி, கிண்ணியா - 5
2021.05.12 (81), ஆண், பிரதான வீதி, கிண்ணியா - 3
2021.05.14 (70), ஆண், அக்ஸா லேன், கிண்ணியா - 2
2021.05.14 (85), ஆண், கிரீன் வீதி, மகரூப் நகர்.
2021.05.15 (78), ஆண், UC ரோட், கிண்ணியா - 6
2021.05.16 (98), பெண், ஜாவா வீதி, கிண்ணியா - 7
2021.05.16 (78), பெண், அண்ணல் நகர்,கிண்ணியா - 3
2021.05.17 (67), ஆண், தாமரைவில், கிண்ணியா.
2021.05.17 (52), ஆண், இடிமன், கிண்ணியா - 4
2021.05.17 (62), ஆண், பெருந்தெரு, கிண்ணியா - 6
2021.05.19 (78), ஆண், ஜாவா வீதி, கிண்ணியா - 6
2021.05.20 (70), ஆண், குட்டிக்கராச், கிண்ணியா - 5
2021.05.20 (52), ஆண், மாஞ்சோலை வீதி, கிண்ணியா - 3
2021.05.22 (43), ஆண், ஜவா வீதி, கிண்ணியா - 6
2021.05.22 (42), பெண், பைசல் நகர், கிண்ணியா - 3
2021.05.22 (70), பெண், P/B, வீதி, கிண்ணியா - 6
2021.05.23 (75), பெண், றஹ்மானியா நகர், கிண்ணியா - 1