மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸார் உட்பட 3 பேருக்கு கோவிட்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 76 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இரு பெண் பொலிஸார் உட்பட 3 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகள் நேற்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் விடுமுறையில் தமது வீட்டிற்குச் சென்ற நிலையில், அவர்களுக்கு அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமையாற்றிய பொலிஸ் நிலயத்திலுள்ள பிரிவிலுள்ள பொலிஸார் 76 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 2 பெண் பொலிஸாருக்கும் ஏற்கனவே கோவிட் என அடையாளம் காணப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளை ஒருவர் உட்பட 3 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களைச் சிகிச்சைக்காக கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam