வவுனியா பொலிஸ் நிலையத்தில் கோவிட் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு
வவுனியாவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 பொலிஸார் இரு தினங்களில் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவுகளிலும், பொலிஸ் விடுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர்
துரைராஜா சபேசன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு
பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு, சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக நல்லுறவுப்
பிரிவு, மது ஒழிப்பு பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, கேட்போர் கூடம், பொலிஸ
பொறுப்பதிகாரி அலுவலகம், பொலிஸ் சிறைக் கூடம், பொலிஸ் வளாகம், பொலிஸாரின்
வாகனங்கள் என்பவற்றுக்குத் தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டுத் தொற்று
நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.



