மரம்,செடிகொடிகள் இருக்கும் இடங்களில் கோவிட் மரணங்கள் குறைவு
அதிகளவில் மரம், செடி, கொடிகள் இருக்கும் பிரதேசங்களில் கோவிட் மரணங்கள் குறிப்பிடத்தக்களது குறைவை காட்டுவதாக சுகாதார பிரிவினர் மேற்கொண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்படியான இயற்கை சூழலில் ஒக்சிஜன் சுவாசம் நல்ல முறையில் கிடைப்பது இதற்கு முக்கியமாக காரணியாக அமைந்துள்ளது என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். கோவிட் தொற்றுக்கு உள்ளான பலருக்கு ஒக்சிஜன் தேவைப்பட்டது.
ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த நோயாளிகளில் பலர் கடந்த காலத்தில் இறந்தனர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் பரவல் ஆரம்பித்தும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 25 சத வீதமாகவும் ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 8 வீதமாக அதிகரித்தது என சுகாதார அமைச்சின் கோவிட் ஒருங்கிணைப்பு தொடர்பான தொழிற்நுட்ப சேவையின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.
இதனிடையே திறந்த வெளிகளுடன் ஒப்பிடும் போது கதவு, ஜன்னல்கள் மூடப்பட்ட அறைகள், மண்டபங்கள் போன்ற இடங்களில் கோவிட் வைரஸ் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது என கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சிறார் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கோவிட் வேகமாக பரவக் கூடும். நன்கு சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் கோவிட் பரவல் சுமார் 50 வீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது எனவும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.



