நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் இரண்டு கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா, புற்று நோய், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri