வவுனியாவில் நான்கு கிராம அலுவலர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா மாவட்டத்தில் நான்கு கிராம அலுவலர்கள் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆண்டியாபுளியங்குளம் கிராம அலுவலர் மற்றும் விடுமுறையிலிருந்த பெண் கிராம அலுவலர் ஆகிய இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல் கட்டி ஆகிய பிரிவு கிராம அலுவலர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா வடக்கில் ஏற்கனவே பிரதேச செயலாளர், இரு கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பல பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகி சுகமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
