வவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சகாயமாதாபுரம் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் என்பவற்றின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.
அதில், சகாயாமாதாபுரம் பகுதியில் 13 பேருக்கும், கோயில்குளம் பகுதியில் 4 பேருக்கும், நெடுங்கேணி மகாஇலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றும் குழுமாட்டு சந்திப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும், ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தாண்டிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் ராணி மில் வீதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் கர்ப்பவதியான பெண் ஒருவருக்கும் என 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஏற்கனவே வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் 54 கோவிட் தொற்றாளர்கள்
அடையாளங்காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் 13 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் குறித்த கிராம தொற்றாளர்களின் எண்ணிக்கை 67
ஆக உயர்வடைந்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
