மன்னாரில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கோவிட் தொற்று உறுதி
மன்னார் - சாந்திபுரம் பகுதியில் நேற்று இரவு புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேற்று இரவு சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் இன்றைய தினம் காலை பீ.சி.ஆர்.பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை இன்று மாலை வெளியாகியது. குறித்த நபருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் மன்னார் மீன் சந்தையில் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலதிக நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
