இரு மாதங்களில் வடக்கில் 841 பேருக்கு கோவிட் தொற்று
கடந்த இரு மாதங்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 841 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் பெப்ரவரி மாதத்தில் 16 ஆயிரத்து 427 பேரிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 ஆயிரத்து 126 பரிசோதனைகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 5 ஆயிரத்து 301 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை வடமாகாணத்தில் கோவிட் தொற்றால் 5 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 3 இறப்புக்களும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 636 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் தனியார்துறை மருத்துவப்பணியாளர்கள், மருத்துவபீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam