கிண்ணியாவில் கோவிட் - 19 சிகிச்சை நிலையங்களை அமைக்க முயற்சி
கிண்ணியாவில் கோவிட் - 19 தெற்றாளர்களின் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளர். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, ஈச்சிலம்பற்று போன்ற பிரதேசங்களில் கோவிட் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் அவற்றில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலைமையினை கவனத்தில் கொண்டு கிண்ணியா பிரதேசத்திலும் கோவிட் சிகிச்சை நிலையங்கள் அமைக்கக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரதேசத்திற்குட்டபட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை விருந்தினர் விடுதி என்பவற்றை மேற்படி நிலையங்களாக மாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் தெரிவிப்பதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam