இலங்கையில் இன்று 501 பேருக்கு கோவிட் - 19 தொற்று
இலங்கையில் மேலும் 501 பேருக்கு இன்று கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களாக 750 முதல் 950 பேர் வரையிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
இதேவேளை, கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 647 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 71 ஆயிரத்து 823 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 6 ஆயிரத்து 176 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.



