நாவலப்பிட்டியிலுள்ள தமிழ் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு கோவிட் - 19 தொற்று
நாவலப்பிட்டி பிரபல தமிழ் பாடசாலையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் அவர்களில் 6 இணைப்பாளர்களுக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை நாவலப்பிட்டி பொது சுகாதார பரிசோதகர் சின்றி மொஹான் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இந்த பாடசாலையை சேர்ந்த 15 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்களுடன் நெருங்கி பழகிய 7 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 32 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன் பாடசாலையை தற்காலிகமாக மூடி நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தொற்றாளர்கள் நாவலப்பிட்டி வெஸ்ட்ஹோல், பாத் கோபல், டெம்பல்ஸ்மோ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் கூறியுள்ளார்.