அமெரிக்காவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று
அமெரிக்காவின் (America) பல பகுதிகளில் புதிய கோவிட் -19 (COVID-19) தொற்று பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சுமார் 39 மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் புதிய அலை பரவி வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.
இருப்பினும், நோய் தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்புகளன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை
அதேவேளை, 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கோவிட் -19 தொற்று முதன்முதலில் பரவியதில் இருந்து கடந்த மாதம் COVID -19 இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் இருந்தது.
இருப்பினும், தற்போது புதிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |