நீதிமன்றம் தடுத்து வைத்த கடவுச்சீட்டை திரும்பப்பெறும் முக்கிய அரசியல்வாதி
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக திருப்பியளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் ரணவக்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இன்று கொழும்பு மேல் நீதிவான் தமித் தொட்டவத்த முன்னிலையில் மனுவொன்றை தாக்கல் செய்த சம்பிக்க ரணவக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
விசா பெறும் நோக்கத்திற்காக தனது கட்சிக்காரரின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அவர் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான், ரணவக்கவின் கடவுச்சொல்லை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி துசித் திலும் குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக பொய்யான சாட்சியங்களை காட்டியமை, பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்தல் உட்பட்ட 16 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
