நீதிமன்ற உத்தரவையையும் மீறி, பணிப்புறக்கணிப்பை தொடரும் தொழிற்சங்கம்!
நாடளாவிய ரீதியில் தாதியர், துணை மற்றும் துணை மருத்துவ சேவைகள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
தமது போராட்டத்துக்கான தடை உத்தரவு இன்னும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தடை உத்தரவு கிடைத்தவுடன் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்..

அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோரின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று மாலை இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார நிபுணத்துவ சேவைகளை மூடிய சேவைகளாக மாற்றுதல், விசேட கடமை கொடுப்பனவை ரூபாவாக அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள்கிழமை முதல் இடம்பெறும் காலவரையறையற்ற போராட்டத்தில் சுமார் 65,000 சுகாதார பணியாளர்கள் இணைந்துள்ளனர்.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri