நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு கடந்த 13 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
நீதிமன்றில் முன்னிலை
சப்புகஸ்கந்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சந்தேகநபரான அசோக ரன்வல மீது இன்று, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, அசோக ரன்வல மீது சாலை விபத்தைத் தடுக்கத் தவறியமை, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் செலுத்த தகுதியற்ற வாகனத்தை ஓட்டி கடுமையான காயங்களை ஏற்படுத்திய ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதன்போது, வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri