சித்திரவதை செய்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற பொதுமகன் (Video)
இரத்தினபுரி -கிரியெல்ல பகுதியில் வைத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு உட்பட்ட அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உாிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரரான ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த மிஷார ரணசிங்க தமது மனுவின் மூலம், பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கும் குற்றவியல் மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க , பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் துறையில் பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் தாம், இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, ரன்மல் கொடிதுவக்கு உட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் மனுதாரர், தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொதுமகன் ஒருவரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியை அடுத்து அவர் மருத்துவ சேவைகள் மற்றும் நலன்புரிப் பிரிவுகளின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.





தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
