சுதந்திரக்கட்சியின் தீர்மானத்திற்கான நீதிமன்ற தடை நீடிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்(SLFP) இருந்து மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன உள்ளிட்டவர்களை நீக்குவதற்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (08) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ம் திகதி வரை குறித்த தமை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால அவகாசம் கோரல்
வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்குமாறு பிரதிவாதி தரப்பான மைத்திரிபால சிறிசேன( Maithripala Sirisena) தரப்பினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய போதும் அவர்கள் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளனர்.

அதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri