நீதிமன்ற தீர்ப்பின் பின் திண்டாடும் பிள்ளையான் - சுரேஷ் சலே
முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் அடையாளம் காணப்பட்டு, அநுர அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் ஆட்டம் கண்டுள்ளனர். இதனால் வெளியில் இருப்பவர்களிடையே தற்போது ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே சமயம், சிறைச்சாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி, குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் நடமாடவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே சில அரசியல் தலைவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,