அநுரவின் வருகையை முன்னிட்டு பொலிஸார் கோரிய தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிஸாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (26) மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர்.
இதனை கவனத்தில் எடுத்த நீதிமன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் ஜனநாயக உரிமை. அதனை தடுக்க முடியாது.
ஆனால் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையில் யாராவது செயற்பட்டால் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து தடையுத்தரவு கோரிக்கையை மன்று நிராகரித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |