ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சாட்சியங்கள் பலவந்தமாக பெற்றப்பட்டதா..!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முக்கிய சாட்சியிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறையினர் பலவந்தமாக வாக்குமூலம் பெற்றதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணத்திற்காக, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை புத்தளம் மாவட்ட மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்க மறுத்துள்ளது.
புத்தளம் ஆதம் லெப்பே ஷெரீப்
புத்தளம், வண்ணாத்திவில்லு, லாக்டோஸ்வத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான வழக்கில் ஆதம் லெப்பே ஷெரீப் எனப்படும் கஃபூர் மாமா முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் ஆவார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையினர் முன்னிலையில் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட வாக்குமூலத்தை நிராகரிக்க மேல் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
புத்தளம், வண்ணாத்திவில்லு, லாக்டோஸ்வத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான வழக்கில் ஆதம் லெப்பே ஷெரீப் எனப்படும் கஃபூர் மாமா என்ற முக்கிய சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் புத்தளம் மேல் நீதிமன்றம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan