ஐந்து மது உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை நிறுத்தப்போவதாக நீதிமன்றில் தெரிவிப்பு
2024, நவம்பர் 30ஆம் திகதிக்குள், நிலுவையை செலுத்தத் தவறினால், டபிள்யூ.எம் மெண்டிஸ் உட்பட ஐந்து மதுபான உற்பத்தியாளர்களின் உரிமங்களை இடைநிறுத்துவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதுவரி ஆணையாளர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இந்த மாத இறுதிக்குள் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
6 பில்லியன் ரூபாய்
எனினும், சரியான நேரத்தில் பணம் செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்துவதற்கான மதுவரித் திணைக்களத்தின் முடிவையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை 2025 ஜனவரி 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு அறிக்கையின்படி, இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை கிட்டத்தட்ட 6 பில்லியன் ரூபாய்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
