சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்கவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பொதுஜன பெரமுணவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை குற்றம் சாட்டும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதற்கு எதிராக சுஜீவ சேனசிங்க, கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நஷ்டஈடு
குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் சீ.பி. ரத்நாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |