இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos)
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் மீதான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், பதினைந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது.
இதன்போது குறித்த 12 இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பத்திரம் இன்றையதினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை, இழுவைமடி வலைகளை உடைமையில் வைத்திருந்தமை, இழுவை மடி வலைகளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதில் முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது. இதே நேரம் வழமை போன்று இன்றையதினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றிற்கு சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri