இரணைதீவு கடல் பகுதியில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடல்தொழிலாளர்களையும் எதிர்வரும் 07ம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைதீவு கடல் பகுதியில் இன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலில் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்து 12 கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான்
நீதிமன்றில், நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார முன்னிலையில் முன்னிலைபடுத்திய போதே குறித்த 12 பேரையும் எதிர்வரும் 07ம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
