500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு இலங்கை ஊடக நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென பிரபல ஊடக நிறுவனம் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முன்னணி அச்சு ஊடக நிறுவனமான வரையறுக்கப்பட்ட அசோசியேடடன் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடட் (லேக் ஹவுஸ்) நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக அவதூறு செய்தியை பிரசூரம் செய்ததாக விஜயதாச ராஜபக்ச வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
2007 நவம்பரில் அப்போதைய ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டதன் பின்னர் , “சிலுமின” பத்திரிகையில் அவரை குறிவைத்து வெளியிடப்பட்ட அவதூறு மற்றும் வெறுப்பூட்டும் கட்டுரைகள் காரணமாக தமக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அவர் 2009 ஆம் ஆண்டு 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
2010 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அந்த வழக்கில் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி, குறித்த தொகையைச் செலுத்துமாறு லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து நிறுவனம் 2013 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆனால், அந்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீடு செய்தது. இன்று நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டையும் நிராகரித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் ஆரம்ப தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புளி, மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதியரசர்களினால் விசாரிக்கப்பட்டது.
விஜயதாச ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் குவேரா டி சோய்ஸா, மூத்த வழக்கறிஞர் ஜி. ஜி. அருள்ப்ரகாசம் அவர்களின் ஆலோசனையின் கீழ் வழக்கறிஞர்கள் சஜான் டி சோய்ஸா மற்றும் ரந்திவரி அரங்கல ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் பயிஸ் முஸ்தபா முன்னிலையாகியிருந்தனர்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
