கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு (video)
கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் பிளேஸ் வீதியூடாக வந்து காலிமுகத்திடல் நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொம்பனிதெரு பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிறப்பித்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
எனினும் காலிமுகத்திடலுக்கு நுழையாமல் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு இந்த தடை உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri