தனியாருக்கு சொந்தமான வீட்டை கையகப்படுத்திய தமிழ் அரசியல்வாதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் துறைக்கு சொந்தமான வீடொன்றை தனது சொந்த மாளிகையாக தேவைக்காக வைத்திருந்தமைக்கு எதிராக நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான லிந்துல ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம், 30 வருடங்களாக எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் வசமிருந்துள்ளது.
குறித்த இல்லம் பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தினால், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பில், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு அரவிந்த குமார் வெளியேற வேண்டும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த குமார் மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில், மேற்படி நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட பிஸ்கல் உத்தியோகத்தர்கள் லிந்துலை பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உத்தியோகபூர்வ இல்லகத்துக்குச் சென்று அரவிந்த குமாருக்கு சொந்தமான அனைத்து உடமைகளையும் பட்டியலிட்டனர்.
வீடு மற்றும் அதன் நகலை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்து, வீடு மற்றும் உடமைகள் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அரசியல் அதிகாரம்
அரவிந்த குமார், அரசியலுக்கு வந்ததிலிருந்து, அரசியலின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் நீண்ட காலம் தங்கியிருந்ததாக ஹென்ஃபோல்ட் தோட்டத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தினால் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம், தோட்டத்தில் பணிபுரியும் மற்றுமொரு அதிகாரிக்கு உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு தோட்டத்தின் பிரதான எழுத்தராக அரவிந்த குமார் பணியாற்றிய போது, தோட்ட நிர்வாகத்தினால் குறித்த இல்லம், அரவிந்த குமாருக்கு உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துவதற்கு வழங்கியது. எனினும் அரவிந்தகுமார் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர், குறித்த இல்லத்தை மீண்டும் தோட்டத்திற்கு ஒப்படைக்காமல், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிலேயே வசித்து வந்துள்ளார்.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri