மனுஷவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர்,முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதாகக் கூறப்படும் முறைகேடு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பிணை மனு இன்று (03) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பாக முன்னிலையான உதவிப் பணிப்பாளர் நாயகம் அனுஷா சம்மந்தப்பெரும, மனுவுக்கு எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும், மனுஷ நாணயக்கார சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த ஆட்சேபனைகளுக்கு பதில்களை தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
அதன்படி, அடுத்த செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வ அநிக்கையை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



