சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கோரிக்கை நிறைவேற்றம்
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு(Jerome Fernando) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நேற்று(03.04.2024) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதன்போது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெரோம் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பரிசீலித்த நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
