ஹஜ் யாத்திரீகர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகளை இடைநிறுத்தவும் முறையான ஒதுக்கீட்டிற்காக பாதிக்கப்பட்ட பயண முகவரை சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய (Saudi Arabia) அரசாங்கம் யாத்திரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது.
இந்தாண்டு இலங்கையில் இருந்து 3,500 யாத்திரீகர்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பயண முகவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம்
இந்தநிலையில் பயண முகவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹஜ் குழு, தனது பயண உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக இரத்து செய்துள்ளதாக பயண முகவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மனுதாரர் தனது மனுவில் இரண்டு ஆண்டுகளுக்கு தனது உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான குழுவின் முடிவு பாதுகாப்பு பிணைய நிதி காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2024ஆம் ஆண்டிற்கான பயண முகவராக தன்னை பதிவு செய்யுமாறும், டிசம்பர் 2023இல் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டை இடைநிறுத்துமாறும் மனுதாரர் தரப்பு கோரியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam