யாழில் புளி மோசடி குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (26.10.2022) உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில், நேற்று மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ். நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
நவம்பர் 9ஆம் திகதி வரை குறித்த வழக்கை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்து
உத்தரவிட்டது.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
