பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 01ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராஜகுலேந்திரன் பிரிந்தன், கடந்த 18ஆம் திகதி (18.11.2025) நள்ளிரவு, வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் கூறப்பட்டு யாழ். வடமராட்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25.11.2025) பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற அனுமதி
இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நெல்லியடி பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நெல்லியடி பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01ஆம் திகதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |