ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று(9) உத்தரவிட்டுள்ளார்.
கொட்பே, சமூத்திராகம, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை நகரில் வைத்து 2கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நின்ற வேளை திருகோணமலை தலைமையக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கெதிராக ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த வழக்குகள் இரண்டு
திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.



