இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!(Photos)
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளடங்களாக இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேரை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த 15 பேரும் நேற்று (17.11.2022) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை தலா ஒருவருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து குறித்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்தார்.
இந்த நிலையில் குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் நேற்றைய தினம் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்க கோரி சட்டத்தரணி ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடு, குறித்த விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி
வைத்தார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
